மதனை இன்னும் கைது செய்யவில்லையா? கொதித்தெழுந்த நீதிபதிகள்

Report Print Santhan in இந்தியா

வேந்தர் மூவிஸ் மதனை கைது செய்யாத பொலிஸ் கமிஷனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மே மாதம் தலைமறைவான வேந்தர் மூவிஸ் மதனை கண்டுபிடித்து தரக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தாயார் மனுத்தாக்கல் செய்தார்.

இதற்கிடையே எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.72 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக மதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ராதகிருஷ்ணன் அவர்களை, இவ்வழக்கு தொடர்பாக விசாரணை செய்யும் படி உத்தரவிட்டனர்.

கடந்த 15 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், குற்றவாளி மதனை ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் படி நீதிபதிகள் மீண்டும் உத்தரவிட்டனர்.

அதன்படி ஒரு வாரம் முடிந்த நிலையில் வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. விசாரணையில் குற்றவாளி மதனை இன்னும் கண்டுபிடிக்காத காரணத்தினால், கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், மதனை கைது செய்யாத சென்னை பொலிஸ் கமிஷனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து பொலிசார் கேட்ட வேண்டுகோளுக்கினங்க மதனை அக்டோபர் 6 ஆம் திகதிக்குள் கைது செய்ய வேண்டும் என்றும், இதுவே இறுதி கெடு எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments