17 வயதில் நான் சந்தித்த பாலியல் கொடுமைகள்: பிரபல நடிகை ஓபன் டாக்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தனது 17 வயதில் தான் அனுபவித்த பாலியல் கொடுமைகள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய 17 வயதில் நான் சந்தித்த உடல் ரீதியான பாலியல் வன்கொடுமைகள் எனக்குள் மரண பயத்தை ஏற்படுத்தியது.

இந்த சித்ரவதைக்கெல்லாம் ஒரு செல்வந்தர் தான் காரணம், ஆனால் இதனை நான் மூடிமறைக்காமல் எனது பெற்றோருடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தேன்.

இந்த சம்பவத்தால் எனது பெற்றோரின் பெயர் வெளியில் வந்துவிடுமோ என்று அச்சம்கொள்ளாமல் துணிந்து புகார் அளித்தேன்.

இந்த அனுபவத்திற்கு பெயர் பெண்ணியம்தானா? என்கிற கேள்வி எனக்குள் எழும்பியது. காதலன் ஏமாற்றிவிட்ட பிறகு அவன் வாங்கிகொடுத்த பொருட்களை வைத்துக்கொண்டு என்னிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கிறது என கூறுவது பெண்ணியம் இல்லை.

அதுபோன்று யாரோ ஒருத்தரின் சம்மதத்துக்காவும், அங்கீகாரத்திற்காகவும் காத்திருக்கும் பெண் நான் இல்லை என கூறியுள்ளார்.

கங்கனாவுக்கும், ரித்திக் ரோஷனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் பாலிவுட்டில் செய்திகள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments