ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்வது எப்போது?

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் நிலவி வருகிறது.

பிரேத பரிசோதனைக்காக ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கான மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் 'என் விருப்பப்படி ஒருவர் இடம்பெற வேண்டும்' என ராம்குமாரின் தந்தை பரமசிவன் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி சிவஞானம், விருப்பப்படி மருத்துவரை நியமிக்க கோருவதை ஏற்க முடியாது, அரசு நியமித்த மூன்று மருத்துவர்களுடன் கூடுதலாக, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் பாலசுப்ரமணியன் இடம் பெறுவார் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு, பிரேத பரிசோதனையின் போது ராமச்சந்திரா மருத்துவக் கல்லுாரி மருத்துவர் சம்பத்குமார் இருக்க அனுமதிக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர் விருப்பப்படி மருத்துவராக இருக்க, உச்சநீதிமன்றம் சில வழக்குகளில் அனுமதித்துள்ளது என்று வாதாடியுள்ளார்.

மனுவை விசாரித்த 'டிவிஷன் பெஞ்ச்' நீதிபதி ரமேஷ் பிறப்பித்த உத்தரவில், பிரேத பரிசோதனையின் போது, தனிப்பட்ட தடய அறிவியல் நிபுணர் இருக்க அனுமதிக்கலாம். அதனால் அரசு வழக்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

அரசு தரப்பும் நியாயமாக இருப்பதை உறுதி செய்யலாம் என்பது என் கருத்து. தனிப்பட்டவரை நியமித்தால், அரசு மருத்துவர்கள் மீது, மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகி விடும். ஆனால், கூடுதலாக அரசு மருத்துவரை சேர்க்கலாம் என்பது நீதிபதி வைத்தியநாதனின் கருத்து.

எனவே எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதால், இந்த மனுவை மூன்றாவது நீதிபதி முன் பட்டியலிட வேண்டும். மூன்றாவது நீதிபதி முடிவெடுக்கும் வரை பிரேத பரிசோதனை நடத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments