மதுவால் மங்கிய புத்தி: தகர்கிறதா கனவு?

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கார் பந்தைய வீரரின் ஓட்டுநர் உரிமத்தை ஆயுள் முழுவதும் ரத்து செய்ய அடையாறு போக்குவரத்து புலனாய்வு பொலிசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை தி.நகரை சேர்ந்த வழக்கறிஞரின் மகனான விகாஷ்(22) என்ற கார்பந்தய வீரர், தன் நண்பர் சரவணனுடன் சேர்ந்து மது விருந்தில் கலந்துகொண்டுவிட்டு, நள்ளிரவு வேளையில் வீட்டுக்கு திரும்புகையில், சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது தனது சொகுசு காரை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பலியானார் மற்றும் 12 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மகன் விகாஷ் கார் பந்தய வீரர் என்பதால் சம்பவத்திற்கு முன்னரே, சென்னை சாலைகளில் அதிவேகமாக காரை இயங்கி வந்ததும், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் கார் பந்தய வீரரான விகாஷ் மற்றும் சரண்குமார் ஆகியோரின் ஓட்டுனர் உரிமத்தை ஆயுள் முழுவதும் வாகனம் ஓட்டாத வகையில் தடை செய்ய முடிவு செய்துள்ளோம். இது இரவு நேரங்களில் சொகுசு கார்களில் குடிபோதையில் வாகன ஓட்டும் நபர்களுக்கு எச்சரிக்கையாக அமையும்.

மேலும், இரவு நேரங்களில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், முக்கிய சாலைகளின் இடையே அதிக தடுப்புகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அடையாறு போக்குவரத்து புலனாய்வு பொலிசார் தெரிவிதுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments