பசியால் வாடிய தமிழர், கன்னடர்களுக்கு உணவளிக்கும் மக்கள்! உண்மை சம்பவம்

Report Print Santhan in இந்தியா

காவிரி நதி நீர் பிரச்சனை காரணமாக கர்நாடக எல்லைப் பகுதியில் பசியில் வாடும் தமிழர்கள், கன்னடர்களுக்கு தன்னார்வ குழு இலவசமாக உணவு வழங்கி வருகிறது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவின் எல்லைப்பகுதிகளான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

இதனால் தமிழகத்திலிருந்து பெங்களூருவுக்கு கல்வி, வேலை மற்றும் மருத்துவ தேவைகள் தொடர்பாக செல்பவர்கள் உணவு கிடைக்காகல் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனை உணர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஜுஜுவாடி கிராமபொது மக்கள் உணவில்லாமல் தவிப்பருக்கு உணவு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

இதனால் கிராமமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடந்த ஆறு நாட்களாக இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். இதில் நாள் ஒன்றுக்கு 200 கிலோ அரிசி வீதம் விதவிதமாக உணவு சமைத்து பரிமாறி வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது, காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்திற்கும், காவிரிக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு எல்லைப்பகுதிகளில் அமைதி நிலைக்கவேண்டும். அதுவரை சகோதரத்துவத்தின் வெளிப்படையாக நாள்தோறும் உணவு வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

பெங்களூரில் கடைகள் இல்லாததால் பசியுடன் வந்த தங்களுக்கு ஜூஜூவாடி கிராம மக்கள் அளிப்பது உணவு மட்டும் அல்ல, அன்பையும் சேர்த்துதான் என்கின்றனர் அங்கிருந்து வரும் தமிழர்கள்.

இந்த உணவை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பாகுபாடு இன்றி வழங்கி சகோதரத்துவத்தை பறைசாற்றுகின்றனர் கிராமமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments