சபாஷ் சுட்டி! 1 1/2 வயதில் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் குழந்தை

Report Print Abhimanyu in இந்தியா

தற்போது சிறு வயதிலேயே பலகுழந்தைகள் தங்களது அபாரதிறமைகளை சிறப்பாக வெளிகாட்டிவருகின்றன.

இதற்கு முன்னுதாரணமாக 26 நாடுகளின் பணத்தாள்கள் மற்றும் உலகின் ஏழு அதிசயங்களையும் அடையாளம் காட்டி ஆச்சிரியப்படுத்தி வருகிறார் நாக்பூரைச் சேர்ந்த 18 மாத பெண் குழந்தையான ஆத்விகா பேல்.

இந்தியா நாக்பூரைச் சேர்ந்த ஆத்விகா பேல், 26 நாடுகளின் பணத்தாள்களை தெரிந்து வைத்துள்ளதுடன் உலகின் ஏழு அதிசயங்களையும் அவை அமைந்துள்ள நாடுகளையும் அடையாளம் காட்டி அசத்தி வருகின்றார்.

மேலும் ஆங்கிலத்தில் உள்ள விலங்குகளின் பெயரை மராட்டி மொழியில் மொழி பெயர்த்தும் சொல்லும் திறனையும் தன்னகத்தே வைத்துள்ளார்.

தனது மகள் ஆறு மாதங்களிலேயே அனைத்து விடயங்களையும் கவனிக்கத்தொடங்கிவிட்டதாகவும், ஆத்விகா தவழத் தொடங்கிய போதே ஆங்கில எழுத்துகள், பழங்கள் ஆகியவற்றின் படங்களை காட்டி, அவை குறித்து கற்றுக் கொடுக்க தொடங்கியதாகவும் அவளது தாய் அஸ்வாரி பேல் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

எட்டு மாதத்தில் நாடுகளின் கரன்சிகளை கற்றுக் கொண்ட ஆத்விகா, பத்து மாதத்தில் உடலின் பாகங்களை அடையாளம் காணவும் கற்றுக் கொண்டாராம்.

பிரபல இந்திய ஊடக நிருபர் ஒருவரும் இரண்டு மணி நேரம் செலவிட்டு, சுமார் 100 கேள்விகளை ஆத்விகாவிடம் கேட்டுள்ளார். அவருடைய கேள்வி அனைத்திற்கும் சிறு தவறு கூட இன்றி ஆத்விகா பதிலளித்துள்ளாள் என்பது ஆச்சரியமான விடயம் தானே!

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments