தமிழ்நாட்டுக்கு வந்தால் உன் கதை முடிந்தது: போனில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்!

Report Print Santhan in இந்தியா

தைரியம் இருந்தால் தமிழ்நாட்டுக்கு வந்து பார் என தனக்கு மிரட்டல் விடுத்ததாக கன்னட அமைப்பின் தலைவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரில் தமிழகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் அமைப்புகளில் கஸ்தூரி கர்நாடக ஜனபர வேதிக என்ற அமைப்பும் ஒன்று.

இந்த அமைப்பின் தலைவர் நீலேஷ் கெளடா பொலிசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 12 ஆம் திகதி பெங்களூரில் கலவரம் ஏற்பட்ட போது தனக்கு ஒரு போன் வந்ததாகவும், அதில் தமிழில் பேசிய அந்த நபர் காவிரிக்கு எதிராக போராட்டம் நடத்துவதை கைவிடுமாறும், தான் தமிழத்தை சேர்ந்தவன் தற்போது வட அமெரிக்காவில் இருந்து பேசுவதாக கூறினான் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பேசிய அவர் இடைவிடாமல், அநாகரீகமாக பேசினார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதை கைவிடு என்று கூறினார், தான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, தைரியம் இருந்தால் தமிழ்நாட்டு பக்கம் வந்து பார், உன்னை வைத்துக் கொள்கிறேன் என மிரட்டி கைப்பேசியை வைத்து விட்டதாகவும் புகார் மனுவில் தெரிவித்தார்.

பொலிசார் விசாரணை நடத்திய போது, போன் தமிழகத்தின் திருச்சியிலிருந்து வந்துள்ளதாகவும், ஆனால் தொடர்பு கொண்ட நபரின் முழு விபரம் சரியாக தெரியவில்லை என்றும் உண்மையான நபர் தெரிந்தவுடன் அறிவிக்கப்படும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments