கழுத்தில் தூக்குபோட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கர்நாடக விவசாயிகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

காவிரியில் நாளை முதல் 27ம் திகதி வரை 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு விதித்தது உச்சநீதிமன்றம்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அமைப்பினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

இன்று காலையில் விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் பெங்களூரு- மைசூரு சாலையில் தங்களின் கழுத்தில் பச்சை நிற துணியை கட்டி, தூக்கில் தொங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மறியல் போராட்டத்தால் கர்நாடகாவில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. ஆங்காங்கே பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உச்சநீதின்ற தீர்ப்பிற்குப் பின்னர் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகா முதல்வர் சித்தராமய்யா, உச்சநீதிமன்ற உத்தரவு செயல்படுத்த இயலாது என்று கூறியுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினர், எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

ANI

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments