பாகிஸ்தானில் இருந்து 36 தலைகளை கொண்டு வர வேண்டும்: ராணுவ வீரரின் மனைவி கதறல்

Report Print Aravinth in இந்தியா

உரி தாக்குதலில் உயிரிழந்த 18 வீரர்களின் ஆத்மா சாந்தியடையும் வகையில் பாகிஸ்தானில் இருந்து 36 தலைகளை பலி கொடுக்க வேண்டும் என தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் மனைவி தெரிவித்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் இந்திய ராணுவத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.

இதன் மீது கடந்த 18 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 18 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தான் தாக்குதல் நடத்தியுள்ளது என உறுதிபட தெரியவந்த நிலையில், அந்நாட்டிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.

தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் உடல்கள் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், இதற்கு முன்னரும் உரி பகுதியில் நடந்தது போல் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் போராடி உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களின் மனைவியர், ’பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பாடம் கற்பிக்க வேண்டும்’ என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், மற்றொரு உயிரிழந்த வீரரின் மனைவி தர்மாவதி என்பவர், கடந்த 2013-ம் ஆண்டு எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் எனது கணவர் ஹேம்ராஜ் சிங் கொடூரமான முறையில் தலை துண்டித்து கொல்லப்பட்டார்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என் கணவரின் தலைக்கு பதிலாக பாகிஸ்தானில் இருந்து பத்து தலைகளை கொண்டு வருவோம் என்று அப்போது சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார்.

உரி தீவிரவாத தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தானில் இருந்து குறைந்தபட்சம் 36 தலைகளையாவது இந்தியா கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments