கொலை, தற்கொலை எல்லாம் சாதாரணம் தானே? பரபரப்பை கிளப்பிய கருணாநிதி

Report Print Santhan in இந்தியா

தற்போது தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் கொலை, தற்கொலை எல்லாம் சாதாரணம் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வேலூர் சிறையில் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் தாக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், தற்போது சென்னை புழல் சிறையில் ராம்குமார் சந்தேகத்தின் பேரில் இறந்து கிடக்கிறார். இதை பொலிசார் தற்கொலை என்கிறார்கள், மேலும் சிலரோ இதை கொலை என்று கூறுகிறார்கள்.

கோவை மத்திய சிறையில் கழுத்தை அறுத்துக்கொண்டு செந்தில் குமார் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் கடலூர் சிறையில் இரண்டு கைதிகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதைப் பற்றி எல்லாம் தற்போதைய அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை என்றும், ஜனநாயக படுகொலை நிகழ்த்துபவர்களுக்கு இது எல்லாம் சாதரணம் தானே? என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments