சுவாதி படுகொலை: தமிழச்சி வெளியிட்ட தகவல் உண்மை என நிரூபணம்

Report Print Basu in இந்தியா

சுவாதி படுகொலை தொடர்பாக பேஸ்புக்கில் பல பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வரும் தமிழச்சி மீது பொலிஸில் புகார் அளிக்க போவதாக மணியின் தந்தை இசக்கி தெரிவித்துள்ளார். இதன் மூலம் மணி என்ற நபர் உள்ளது நிரூபணமாகியுள்ளது.

ராம்குமார் மரணத்தை தொடர்ந்து தமிழச்சி வெளியிட்ட பதிவில், சுவாதியை கொன்றது மணி. அவருடைய தந்தை பெயர் இச்க்கி. நெல்லை மாவட்டத்தில் இருக்கிற முத்தூர் சிவந்திப்பட்டி தான் மணியோட சொந்த ஊர்.

தேவர் பேரணி மாடசாமி பிலட்டிங் காண்ரக்டரிடம் மணி வேலை செய்து வருவதாகவும் கருப்பு முருகானந்தத்தின் அடியாள் படையில் மணியும் ஒருவர். மணி தான் சுவாதி கொலை குற்றவாளி என பதிவிட்டிருந்தார்.

மேலும், இது தொடர்பான விசாரணையின் போது அக்கிராமத்தில் மணி என்ற நபரே இல்லை என்றும் சொல்வார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு வைரலாக, இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சிவந்திப்பட்டியில் உண்மையிலே இசக்கி மகன் மணி என்பவர் உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், மணியின் தந்தை இசக்கி கூறியதாவது. என் மகன் அப்படிப்பட்ட நபர் இல்லை. இதுபோன்ற பொய்ப்புகாரை எதிர்த்து நிற்போம்.

நெல்லை மாவட்ட எஸ்.பி.யிடம் தமிழச்சி மேல் புகார் அளிக்க போகிறேன். இது தொடர்பாக வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்தி வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தமிழச்சி குறிப்பிட்ட மணி என்ற நபர் உண்மையிலே இருக்கிறார் என்பது உறுதியாகி விட்டது.

இந்நிலையில், தன் மீது புகார் அளிக்க போவதாக வந்துள்ள செய்தியையும் தமிழச்சி தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments