12 பாம்புகள் கடித்தும் உயிர் பிழைத்த அதிசய மனிதர்

Report Print Arbin Arbin in இந்தியா

கர்நாடகாவில் பலமுறையாக 12 பாம்புகள் கடித்தும் நபர் ஒருவர் உயிர் பிழைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் விஜயபுரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் 20 வயதான லிங்கராஜு. இவரை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறை பாம்பு கடித்துள்ளது. இதில் இரண்டு முறை ராஜநாகம் கடித்துள்ளது.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த லிங்கராஜு தினக்கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

சோலாப்பூர் பகுதியில் இவர்களது குடும்பம் குடியிருந்து வந்த காலகட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இவரை 7 முறை பாம்பு கடித்துள்ளது. இதில் கவலை அடைந்த குடும்பத்தினர் இவரை மருத்துவர் ஒருவரிடம் காண்பித்துள்ளனர். அவர் இவருக்கு ஆறு மாத கால சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளார்.

சுமார் 40,000 ரூபாய் மருத்துவ செலவானதால் இருப்பதையெல்லம் விற்று கடனை அடைத்துவிட்டு அங்கிருந்து விஜயபுரா பகுதிக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளனர்.

காரணம் முன்னர் குடியிருந்த பகுதியில் ஏதேனும் சாபம் இருக்கலாம் அதனாலையே தமது மகனுக்கு தொடர்ந்து பாம்பு கடிப்பதாக அந்த குடும்பத்தினர் கருதியுள்ளனர்.

ஆனால் அவர்களது நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் கடந்த மாதம் மட்டும் 4 முறை இவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் பெரும் கவலையடைந்த குடும்பத்தினர் தற்போது லிங்கராஜுவை வேலைக்கு கூட வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே தங்கும்படி கூறியுள்ளனர்.

லிங்கராஜுவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களால் குறித்த காரணத்தை இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதனாலையே அவரது குடும்பத்தினர் இதை சாபம் என்று நம்புகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments