பேருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்து: 35 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

பீகார் மாநிலத்தில் குளத்தில் பேருந்து கவிழந்த விபத்தில் 35 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து 180 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மதுபானியில் சித்தாமர்ஹ் தர்பங்கா நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது.

மதுபானி அருகே உள்ள சன்குளி துபி கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டு இருந்த போது தனது கட்டுப்பாட்டை இழந்து 25 அடி ஆழம் உள்ள குளத்திற்குள் பாய்ந்தது.

இதில் பேருந்தில் இருந்த பலர் நீரில் முழ்கினர். இதனிடையே இதுவரை 35 பேரின் உடல், குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேருந்தில் பயணித்த சில பயணிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பேருந்தில் 55 பயணிகள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி பேருந்து அதிக நேரம் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் அதில் பயணம் செய்த அனைவரும் பலியாக வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments