“தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது”- கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர்

Report Print Abhimanyu in இந்தியா

“தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட தர முடியாது” என கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டில் அதிரடியாக கருத்து வெளியுட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகத்தையே பிரட்டிப்போட்ட பிரச்சனை கர்நாடக நீர் விவகாரம்தான் இந்நிலையில் இன்று தமிழகத்திற்கு தினமும் 3000 கன அடி வீதம் செப்டம்பர் 21ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு நீர் கொடுக்க வேண்டுமே என காவிரி மேற்பார்வைக் குழுவின் தலைவர் சசி சேகர் டெல்லியில் ஆணை பிறப்பித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக செய்தியாளர் சந்திப்பின் போது கர்நாடகா நீர் வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் அளித்த பேட்டியில், ''தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட கொடுக்க மாட்டோம். நாளை உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின்னரே முடிவு எடுக்கப்படும்'' என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கர்நாடகாவில் பதட்டம் ஏற்படும் என கருதப்படும் இடங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments