குற்ற உணர்ச்சியால் ராம்குமார் தற்கொலை செய்திருக்கலாம்: சுவாதியின் நண்பர் பிலால்

Report Print Deepthi Deepthi in இந்தியா

குற்ற உணர்ச்சி காரணமாகவே ராம்குமார் தற்கொலை செய்திருக்கலாம் என சுவாதியின் நண்பர் பிலால் சித்திக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ராம்குமாருக்கு எப்படியாவது தண்டனை வாங்கிகொடுக்க வேண்டும் என முயற்சி செய்தோம், ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது.

ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது மிகவும் தவறான ஒன்று, அவருக்குள் குற்ற உணர்ச்சியே இருந்திருக்கலாம், அதனால் தான் அவர் இவ்வாறு செய்திருக்கிறார்.

இது தற்கொலையா? கொலையா? என்பது குறித்து விசாரணையில் தெரியவரும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments