குடி போதையில் பெற்ற தாயையும், சகோதரியையும் கொன்ற மனித மிருகம்

Report Print Raju Raju in இந்தியா

குடிக்க பணம் தராததால் தாயையும், சகோதரியையும் ஒருவர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் குல்கர்கா மாவட்டதை சேர்ந்தவர் ஆனந்த்(40). இவர் தனது தாயார் கங்கம்மா (65) சகோதரி பீம்பாய் (45) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று ஆனந்த தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவரும் தன்னிடம் இருந்த ஐநூறு ரூபாயை தன் மகனிடம் கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை வைத்து நாள் முழுவதும் குடித்த ஆனந்த் முழு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் நள்ளிரவில் மீண்டும் மது குடிக்க தன் தாயாரிடம் பணம் கேட்டுள்ளார்.

அவர் தன்னிடம் பணம் இல்லை என கூற, தன் அக்கா பீம்பாயிடம் பணம் கேட்க அவரும் இல்லை என கூறியுள்ளார்.

போதை தலைகேறிய நிலையில் இருந்த ஆனந்த் ஆத்திரத்தில் தன் தாய், சகோதரி ஆகிய இருவரையும் கொடூரமாக தாக்கினார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

பின்னர் அவர்களின் உறவினர்கள் பொலிசுக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த பொலிசார் ஆனந்தை கைது செய்தனர்.

2013ல் தன் நண்பரை கொன்ற கொலை வழக்கில் சிறைக்கு சென்ற ஆனந்த் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments