கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கசிந்தது! பிரபல நடிகை பொலிசில் பரபரப்பு புகார்

Report Print Jubilee Jubilee in இந்தியா

கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகை சோனு கவுடா பொலிசில் புகார் அளித்துள்ளார்.

நடிகை சோனு கவுடா தமிழில் ஆண்மை தவறேல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இந்த நிலையில் சில நாட்களாக முன்னாள் எம்.எல்.ஏ மகனுடன் சோனு கவுடா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் என்ற பெயரில் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது.

இந்த புகைப்படங்களை பார்த்த நடிகை சோனு கவுடா அதிர்ச்சியடைந்ததார். அவரது கணவர் மனோஜூடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தான் இப்படி தவறான தகவல்களுடன் இணையத்தில் பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ள சோனு கவுடா, புகைப்படங்களை கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments