கர்நாடகாவில் மீண்டும் ஒரு தமிழர் மீது தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ

Report Print Santhan in இந்தியா

கர்நாடகாவில் மீண்டும் தமிழக லொறி டிரைவர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதை கண்டித்து கர்நாடகாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மாநிலம் முழுவதுமே போர்க்களம் போல் காட்சியளித்த நிலையில், காவல்துறை மற்றும் பாதுகாப்பு துறையினரின் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த லொறி டிரைவர் ஒருவர் தாக்கப்படுவதை போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் இயல்புவாழ்க்கை திரும்பும் நிலையில் தமிழர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பது மேலும் வன்முறைகள் தூண்டுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments