தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடுங்கள்! அதிரடி உத்தரவு..பதற்ற நிலையில் பெங்களூரு

Report Print Santhan in இந்தியா

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று டெல்லியில் நடந்த காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், கர்நாடாக தண்ணீர் திறந்துவிட முடியாது என அறிக்கை தாக்கல் செய்தது.

மேலும் அதில், தமிழகத்திற்கு இது வரை 13 டிஎம்சி அளவு தண்ணீர் காவிரியிலிருந்து திறக்கப்பட்டுள்ளது எனவும், இதன் காரணமாக தங்கள் மாநிலத்தில் உள்ள 4 அணைகளில் 27 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.

எனவே தங்களுக்கு அடுத்த ஆண்டு யூலை மாதம் வரை 21 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதால், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்கமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறியுள்ளது.

மேலும் கர்நாடகாவில் இந்த ஆண்டு மழை 18 சதவீதம் குறைந்த அளவே பெய்துள்ளதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாது எனவும் தெரிவித்திருந்தது.

ஆனால் இதனை நிராகரித்த மேற்பார்வை குழு, வினாடிக்கு 3000 கனஅடி வீதம் தமிழகத்துக்கு காவிரியில் 10 நாட்களுக்கு தண்ணீர் தர வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து பெங்களூருவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, வன்முறை சம்பவங்களை தவிர்க்க ஆயிரக்கணக்கில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments