தமிழக சிறைகளில் இதுவரை உயிரிழந்த கைதிகள் எத்தனை பேர் தெரியுமா?

Report Print Peterson Peterson in இந்தியா

தமிழகத்தில் உள்ள சிறைகளில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 1,162 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் கேசவன் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக சிறைகளில் உயிரிழந்த கைதிகள் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார்.

அதில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 1,162 கைதிகள் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் எத்தனை கைதிகள் உயிரிழந்துள்ளனர் என்ற புள்ளி விபரமும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000 - 69 கைதிகள் உயிரிழப்பு

2001 - 76

2002 - 90

2003 - 107

2004 - 104

2005 - 103

2006 - 116

2007 - 78

2008 - 74

2009 - 65

2010 - 79

2011 - 64

2012 - 62

2013 - 75

சிறையில் கைதிகள் மரணத்திற்கு முக்கிய காரணம் என்ன?

சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் உயிரிழப்பதற்கு பொலிஸ் அதிகாரிகள் கைதிகள் மீது நம்பிக்கை வைக்காமல் இருப்பது தான் முக்கிய காரணம் என வழக்கறிஞர் கேசவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அதனை பொலிசார் உண்மை என நம்ப மாட்டார்கள்.

ஒரு கைதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டால், அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட மாட்டாது. மேலும், மருத்துவர் இல்லாமல் தான் அந்த கைதி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

ஒவ்வொரு சிறைக்கும் இரண்டு மருத்துவர்கள், ஒரு உளவியல் நிபுணர், ஒரு மருந்து அளிக்கும் நபர், ஆண் மற்றும் பெண் என இரண்டு செவிலியர்கள் பணியில் இருப்பார்கள். இவர்கள் சிறையில் 24 மணி நேரமும் பணிபுரிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments