ஆடி கார் ஐஸ்வர்யா முதல் சல்லுபாய் வரை: மீண்டும் நடந்த கோர விபத்து

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வசதி படைத்தவர்கள் அனைவரும் ஏதேனும் மதுவிடுதிகளில் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி கும்மாளம் அடித்துவிட்டு, நள்ளிரவு வேளையில் வீட்டுக்கு திரும்புகையில் அப்பாவி மக்களை கொல்லுகின்றனர்.

இதற்கு உதாரணமான சம்பவம் தான் நடிகர் சல்மான் கடந்த 2004 ஆம் ஆண்டு விபத்தை ஏற்படுத்தியதில் நபர் ஒருவர் பலியானார். அதே போன்று ஆடி கார் ஐஸ்வர்யா ஏற்படுத்திய கார் விபத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் பலியானார்.

மேலும், சமீபத்தில் நடிகர் அருண் விஜய் குடிபோதையில் நுங்கம்பாக்கம் பொலிஸ் வாகனத்தை சேதப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதே போன்று ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது, சென்னை ராதாகிருஷ்ணன் சாலை ஓரத்தில் இரவுநேரத்தில் ஆட்டோக்களை நிறுத்திவிட்டு அதில் ஆட்டோ ஓட்டுநர்கள் உறங்குவது வழக்கம்.

இந்நிலையில் நேற்றிரவும் வழக்கம் போல் ஆட்டோவில் உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் குடிபோதையில் அதிவேகமாக சொகுசு காரை ஒட்டி வந்தவர்கள், இவர்களின் ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியுள்ளனர்.

இதில் ஆட்டோவில் படுத்திருந்த பத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர். அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments