ராம்குமார் மரணத்திற்கு சிறைத் துறை அதிகாரிகளே பொறுப்பு: நீதிபதி

Report Print Santhan in இந்தியா

சென்னை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட, ராம்குமார் மரணத்திற்கு சிறைத்துறை அதிகாரிகள் தான் பொறுப்பு என முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்குமாரின் மரணத்திற்கு சிறைத்துறை அதிகாரிகளே பொறுப்பு எனவும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ராம்குமார் உயிரிழந்திருப்பது சந்தேகம் அளிக்கும் விதமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள், சிறையில் இருக்கும் போது எப்படி உடல்நலகுறைவு ஏற்படுகிறது.

அதுமட்டுமில்லால் அனைத்து சிறைகளிலும் மின்சார வயர்கள் சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் போது, அங்கு மட்டும் எப்படி வெளியில் தெரியும் படி மின்சார வயர்கள் தொங்கப்பட்டிருக்கும்.

ராம்குமார் மரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக கருதப்படுவதால், பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments