ஓடும் ரயிலில் பெண் பாலியல் பலாத்காரம்: தொடரும் கொடுமைகள்

Report Print Raju Raju in இந்தியா

ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அவரை ரயிலில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகார் என்னும் ஊரிலிருந்து 35 மதிக்கதக்க பெண் ரயில் மூலம் தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பெண் இருந்த பெட்டிக்குள் ஏறிய இரண்டு மர்ம நபர்கள், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து, அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து நிர்வாணமாக கீழே தூக்கி வீசினார்கள்.

இதில் ரயிலின் சக்கரம் ஏறி அவரின் ஒரு கால் துண்டானது. வலியால் துடித்த அவரின் அலரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்கள்.

அந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருக்கும் நிலையில், இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments