ராம்குமார் தற்கொலையா? அப்படியல்லாம் இல்ல சார்: பொலிஸ் பதில்

Report Print Fathima Fathima in இந்தியா
706Shares

சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலையடுத்து, அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு புழல் சிறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அந்த ஆடியோ விவரம்:

புழல் சிறை பொலிஸ்: வணக்கம் சார். புழல் 2

வழக்கறிஞர் ராம்ராஜ்: ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் பேசறேன் சார். ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வருகிறதே?

புழல் சிறை பொலிஸ்: அப்படியல்லாம் இல்ல சார். ஓ.பி.க்கு கொண்டு போயிருக்காங்க. முடியாம.

வழக்கறிஞர் ராம்ராஜ்: அப்படியா

புழல் சிறை பொலிஸ்: ஆமாம் சார். அவங்க வீட்டுக்கே போன்ல சொன்னேனே.

வழக்கறிஞர் ராம்ராஜ்: என்ன முடியாம போச்சு. நேத்து பார்த்தப்ப நல்லாதான் இருந்தாரு

புழல் சிறை பொலிஸ்: அப்படியா. முடியலன்னு சொல்லி டாக்டர் கூப்பிட்டு போயிருக்காங்க.

வழக்கறிஞர் ராம்ராஜ்: நேத்து அவரை பார்த்து ஒரு மணி வரையும் பேசிக்கிட்டு இருந்தேன். என்ன ஆச்சு.

புழல் சிறை பொலிஸ்: அப்படியா. டாக்டரு ஏதோ சாப்பாடு சரியில்லைன்னு சொல்லிக்கிட்டு இருந்தாருன்னு நினைக்கிறேன்.

வழக்கறிஞர் ராம்ராஜ்: வேறொன்னும் இல்ல

புழல் சிறை பொலிஸ்: வேறொன்னும் இல்ல. யாரை ஆஸ்பிட்டலுக்கு கொண்டுபோனாலும் வீட்டுக்கு தகவல் சொல்லுவோம் சார்.

வழக்கறிஞர் ராம்ராஜ்: நியூஸ் ஏஜென்சிக்கு இதே தகவலை சொல்லலாம்

புழல் சிறை பொலிஸ்: சொல்லியிருங்க சார். இதே தகவலைத்தான் வீட்டிற்கும் சொல்லியிருக்கிறேன்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments