மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட ராம்குமார்: சிறைக்காவலர் பேச்சிமுத்து பரபரப்பு தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ராம்குமார் தற்கொலை செய்த முயற்சிக்கையில் அவரை காப்பாற்ற முயன்றதாக சிறைக்காவலர் பேச்சிமுத்து பரபரப்பு தகவல் அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறைக்காவலர் பேச்சிமுத்துவிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியுள்ளதாவது, மாலை 4.45 மணியளவில் இரவு உணவுக்காக கைதிகள் அவரவர் அறைகளில் இருந்து வெளியே அழைக்கப்பட்டனர்.

ராம்குமாரும் வெளியே வந்தார். அவர் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் அருகேயுள்ள மருத்துவமனையில் தண்ணீர் குடித்துவிட்டு வருவதாக கூறி சென்றார். அப்போது தான் அங்குள்ள மின்சார பெட்டியை உடைத்து மின் வயரை கடித்துவிட்டார்.

மின்சாரம் பாய்ந்த உடன் ராம்குமார் தூக்கிவீசப்பட்டு கீழே சுருண்டு விழுந்தார். இதைப்பார்த்து அவருடன் இருந்த மற்ற 4 கைதிகளும் ஓட்டம் பிடித்தனர். மின்சாரம் பாய்ந்ததால் அவரை மற்ற கைதிகள் காப்பாற்றவில்லை.

கண் இமைக்கும் நேரத்துக்குள் இந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது. நான் அருகில் ஓடி சென்றேன். அதற்குள் அவர் கீழே சாய்ந்து விட்டார். உடனே அருகில் உள்ள சிறை மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு சேர்த்தோம். அங்கு பணியில் இருந்த மருத்துவர் நவீன்குமார் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம், ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளார்.

முடிந்தவரை நாங்கள் அவரை காப்பாற்றத்தான் முயற்சித்தோம் என சிறைக்காவலர் பேச்சிமுத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments