பொலிசார் என்கவுன்ட்டர் செய்து விடுவார்களா? கேள்வி எழுப்பிய ராம்குமார்

Report Print Santhan in இந்தியா

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தன்னை பொலிசார் என்கவுன்ட்டர் செய்துவிடுவார்களா என்ற பயத்தில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது, சுவாதியிடம் பழக்கம் ஏற்பட்டது எப்படி, அவரை கொலைசெய்வதற்கு யாரேனும் உதவினார்களா என்பது போன்று பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அப்போது ராம்குமார், தன் காதலை சுவாதி நிராகரித்த காரணத்தினாலும், என்னையும், என் குடும்பத்தை பற்றியும் தவறாக பேசியதாலே கொலை செய்ததாக தெரிவித்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்குமாரோ தான் கொலைசெய்யவில்லை என்றும், இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இதனால் பொலிசார் தன் மீது கோபம் கொண்டு தன்னை என்கவுண்டர் செய்து விடுவார்களா என அங்கிருந்த கைதிகளிடம் கேள்வி கேட்டதாகவும், தன்னை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்தாகவும் கூறப்படுகிறது.

மேலும் ராம்குமார் கைதுசெய்யப்பட்ட நாளிலிருந்தே மிகுந்த மனபதற்றத்தில் இருந்ததாக சிறைக்காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments