ராம்குமார் எழுதிய கடிதம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சிறையில் இருந்த ராம்குமார் கடந்த 10 ஆம் திகதி தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் குறிப்பாக அவர் எழுதியிருந்தது, எனக்கும் சுவாதி கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை பற்றித்தான்.

10க்கும் மேற்பட் கேள்விகள் ராம்குமாரிடம் எழுப்பப்பட்டன,

சுவாதி வழக்கில் என்ன நடந்தது? உங்கள் தரப்பு விளக்கம் என்ன? என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், நான் வீட்டில் தூங்கிகொண்டிருந்தேன், அப்போது எனது வீட்டிற்கு வந்த பொலிசார் என்னை பேசவிடாமல் கழுத்தை அறுத்தனர் என பதில் தெரிவித்துள்ளார்.

மேலும், சுவாதியுடன் உங்களுக்கு நட்பு இருந்ததா? என்ற கேள்விக்கு சுவாதியுக்கும் எனக்கும் எவ்வித பழக்கமும் கிடையாது.

சுவாதியின் பெற்றோரை எனக்கு தெரியாது, அவரை நான் ஒருதலையாக காதலிக்கவும் இல்லை, அவரை நான் பின்தொடரவும் இல்லை என பதில் எழுதியுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் பொலிசார் அத்தனையும் மறைத்து ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

இவை அனைத்தையும் ராம்குமார் தனது கைப்பட எழுதி கையொப்பமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments