ராம்குமார் உடல் நாளை பிரேத பரிசோதனை

Report Print Santhan in இந்தியா

ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நாளை நடைபெறும் என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் கூறியுள்ளார்.

ராம்குமாரின் வழக்கறிஞரான ராம்ராஜ் என்பவர் இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், பிரேத பரிசோதனையின்போது முழுவதும் வீடியோ பதிவு செய்யவேண்டும், எங்களது வழக்கறிஞர் உடன் இருத்தல் வேண்டும், மருத்துவ குழுவில் எங்களது மருத்துவர்களும் இடம் பெற வேண்டும்.

அதுவரை பிரேத பரிசோதனை நடத்த கூடாது என முதலில் 4வது அமர்விலும் பின்னர் தலைமை நீதிபதி அமர்விலும் முறையிட்டனர்.

இந்த இரண்டு அமர்விலும் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கூறிவிட்டதால், 11வது நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராம்குமார் உடல் பிரேத பரிசோதனைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், ராம்குமார் மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்ற மனு மீதான விசாரணையை மதியத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

மதிய வேளையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, ராம்குமார் உடலை , 3 பேர் மருத்துவர் குழுவுடன், ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவும் பிரேத பரிசோதனை செய்யலாம் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இதனிடையே, புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், ராம்குமார் மரணம் தொடர்பாக அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஏ.டி.ஜி.பி.,க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments