விக்னேஷ் மரணத்திற்கும், ராம்குமார் மரணத்திற்கும் தொடர்பா?

Report Print Santhan in இந்தியா

கர்நாடக விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்யப்பட்ட விக்னேஷின் மரணத்திற்கும், ராம்குமார் மரணத்திற்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவிரி உரிமையை நிலைநாட்ட, நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன போரட்டம் நடைபெற்ற போது, விக்னேஷ் என்பவர் தீக்குளித்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று ராம்குமார் சென்னை புழல் சிறையில் மின்சாரத்தை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் காவிரிநதி நீர் விவகாரமாக தீக்குளித்த விக்னேஷின் தற்கொலை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதில் தமிழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், இது தமிழகத்தில் பெரிய போரட்டமாக மாறும், அது மட்டுமில்லாமல் தமிழத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கு இது பெரிய இடையூறாக அமைந்து விடும் என்று உளவு தகவல் கூறியதாகவும், எனவே, விக்னேஷின் மரணத்தை மக்கள் மனதிலிருந்து மறக்கடிப்பதற்காகவும், காவிரி பிரச்சனையின் வீரியத்தை குறைப்பதற்காகவும் ராம்குமாரின் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

மேலும் ராம்குமார் மர்ம மரணம் மக்களையும் ஊடகங்களையும் காவிரி பிரச்சனையிலிருந்து திசை திருப்புவதற்காக நடத்தபட்டிருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments