தாமதமாக வீடு வந்து சேர்ந்த இளம் பெண்: கழுத்தை துண்டிக்க முயன்ற தந்தை

Report Print Arbin Arbin in இந்தியா

டெல்லியில் உறவினர் வீடு சென்று தாமதமாக வந்த இளம் வயது மகளை கழுத்தை துண்டிக்க முயன்று தோல்வி கண்ட தந்தை தனியறையில் 5 நாள் பூட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த வெள்ளியன்று உறவினர் வீடு சென்று திரும்பிய இளம் வயது மகளை அவரது தந்தை காரணம் கேட்டு பலமாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கோபத்தில் தமது மகளின் கழுத்தை துண்டிக்க முயன்றுள்ளார். இதில் இருந்து தப்பிய அவர் தமது அறையில் நுழைந்துள்ளார். இதனையடுத்து அவரை அறைக்குள் வைத்து பூட்டிய தந்தை 5 நாட்கள் வரை வெளியே காவலுக்கு இருந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதது கண்டு அங்கிருந்து தப்பிய அந்த இளம் பெண் பாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தமது பாட்டியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இளம் பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த பொலிசார், அவரது தந்தையை விசாரணைக்காக தேடியுள்ளனர். ஆனால் அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

சொல்லிக்கொள்ளும் அளவில் வேலை எதுவும் இல்லாத அந்த நபர் மனைவியின் ஊதியத்தில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 9 ஆம் திகதி தமது உறவினர் வீட்டிற்கு சென்ற குறிப்பிட்ட இளம் பெண், நள்ளிரவு வரை அங்கு தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மிகவும் தாமதமாக வீடு வந்து சேர்ந்த மகளை அவரது தந்தை ஆத்திரத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments