ஐந்து உயிர்களை பலிவாங்கிய ஒரு மாணவியின் செல்பி..! மனதை உருக வைக்கும் சம்பவம்

Report Print Basu in இந்தியா

தெலுங்கானாவில் விபத்துக்குள்ளான ஒரு மாணவியை காப்பாற்ற இரண்டு மாணவிகள் உட்பட ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாரங்கல் மாவட்டத்திலுள்ள தர்மசகர் ஏரியிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிசார் அளித்துள்ள தகவலில், Vaagdevi பொறியியல் கல்லுாரியை சேர்ந்த ஆறு மாணவர்கள் தர்மசகர் ஏரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இதன்போது, ரம்யா பிரத்யுஷா என்ற மாணவி செல்பி எடுக்கும் போது விபத்துக்குள்ளாகி ஏரியில் விழுந்துள்ளார். பிரத்யுஷாவை காப்பாற்ற உடன் இருந்த ஐந்து பேர் ஒருவர் பின் ஒருவராக ஏரியில் குதித்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்து ரம்யா பிரத்யுஷா மட்டும் தட்டு தடுமாறி கரை சேர்ந்துள்ளார். மற்றவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

ஷ்ரவ்யா ரெட்டி, பொலினேனி விணுத்தன, கார்னே சிவசாய், சிவசாய்கிருஷ்ணன், ஸ்ரீநிதி ஆகியோர் நீரில் மூழ்கியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

Sakshipost

Sakshipost

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments