ராம்குமார் மரணத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக நான் கருதுகிறேன், ஏனென்றால் அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் அவரை பலமுறை சந்தித்து பேசியுள்ளார்கள்.

அப்போது, சுவாதி கொலை கொலைக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பலமுறை ராம்குமார் கூறியுள்ளார்.

அப்படியிருக்கையில், ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது உண்மையிலேயே தற்கொலை தானா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளனது.

அவரது இறப்பிற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இதில் எதனையும் மூடி மறைக்காமல், அவரது மரணம் தற்கொலை தான்? என்பதை உறதிப்படுத்தும் வகையில் பல்வேறு விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments