ராம்குமாரை கொன்றது யார்?

Report Print Deepthi Deepthi in இந்தியா

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு குறித்து பல்வேறு மர்மங்கள் நிலவிவந்தன, இவை யாவும் முடிச்சவிழ்க்கப்பட்டாத நிலையில் ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே நெல்லையில் வைத்து ராம்குமாரை பொலிசார் கைது செய்கையில், அவனுடைய கழுத்தை அறுத்ததாகவும், இந்த வழக்கில் ராம்குமார் உண்மையான குற்றவாளி கிடையாது, இவர் வெறும் அம்பு மட்டுமே, ஆனால் அந்த அம்பை எய்துவிட்டவர் வேறு நபர். அந்த குற்றவாளியை நிச்சயமாக கண்டுபிடிக்க வேண்டும் என ராம்குமாரின் வழக்கறிஞர் தெரிவித்து வந்தார்.

மேலும், சிறைச்சாலையில் வைத்து பொலிசார் தன்னை மிரட்டுவதாகவும் ராம்குமார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடியப்படாத நிலையில் ராம்குமார் தற்கொலை செய்துகொண்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

சுவாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம்: அதிர்ச்சி தகவல்

புழல்சிறையில் என் மகனை கொலை செய்து விட்டனர்: ராம்குமாரின் தந்தை கதறல்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments