சுவாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம்: அதிர்ச்சி தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த யூன் மாதம் 24ம் திகதி சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக ராம்குமார் என்பவரை கைது செய்துள்ள பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் புழல் சிறையில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியைக் கடித்து ராம்குமார் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பொலிசார் அழைத்து சென்றனர்.

ஆனால் வரும் வழியிலேயே ராம்குமார் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே ராம்குமாரை பொலிசார் கொன்று விட்டதாக அவரது தந்தை பரமசிவம் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments