பிரியாணிக்காக 42 பஸ்ஸை கொளுத்திய இளம்பெண்! வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Jubilee Jubilee in இந்தியா

காவிரி நதிநீர் வன்முறையின் போது பிரியாணிக்காகவும், பணத்திற்காகவும் ஆசைப்பட்டு பஸ்களை எரிக்க உதவியதாக கைது செய்யப்பட்டுள்ள இளம் பெண் பாக்யஸ்ரீ பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கடந்த 12ம் திகதி காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூரில் நடைபெற்ற வன்முறையில் பெங்களூர் டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 42 பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக 7 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கலவர பின்னணியில் ஒரு பெண் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கிய பொலிசார், யசோதா நகர் பகுதியை சேர்ந்த பாக்யஸ்ரீ என்ற 22 வயது இளம்பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். அவர் கன்னட கஸ்தூரி சங்காத்தனே என்ற கன்னட அமைப்பிலும் சமீபத்தில் சேர்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பாக்யஸ்ரீயிடம் நடத்திய விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. சாதாரண அல்ப காரணத்திற்காக இந்த பஸ்களை எரிக்க உதவியுள்ளார் பாக்யஸ்ரீ.

பாக்யஸ்ரீக்கு அப்பா கிடையாது. தாயுடன் வசித்து வந்தார். கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார். அந்த ஏரியாவை சேர்ந்த இளைஞர்கள் சம்பவத்தன்று பாக்யஸ்ரீயிடம் வந்து கேபிஎன் பஸ்கள் நிறுத்தி வைக்கும் இடத்தை அடையாளம் காட்டக் கூறியுள்ளனர்.

பிரியாணி வாங்கி தருவதாகவும், பணம் தருவதாகவும் அவர்கள் ஆசைக்காட்டியுள்ளனர். இதனால் பாக்யஸ்ரீ பஸ் நிறுத்தப்பட்ட இடத்தை காட்டி வன்முறையை தூண்ட உதவியுள்ளார்.

மேலும், வன்முறை கும்பலிடம் இவரே பெட்ரோல் கேனை எடுத்துக் கொடுத்துள்ளார். இவரும் சேர்ந்து பஸ்ஸுக்குத் தீவைத்துள்ளார்.

நான் ஒரு பஸ்ஸை தீவைத்துக் கொளுத்தியதாக பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டுள்ளார் பாக்யஸ்ரீ. இவரது வாக்குமூலம் பொலிசாரையே அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

மேலும், பெங்களூர் கலவரம் தொடர்பாக மொத்தம் 9 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments