மண்ணில் சிக்கிய டயர்: அலறித்துடித்த பயணிகள்

Report Print Jubilee Jubilee in இந்தியா

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான எஸ்.ஜி.1047 என்ற விமானம் தரையிறங்கிய போது விபத்தில் சிக்கியுள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் ரேனிகுண்டா விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அப்போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சென்றது, இதில் விமானத்தின் டயர் மண்ணில் சிக்கிக் கொண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் அதில் இருந்த 70க்கும் மேற்பட்ட பயணிகள் அலற ஆரம்பித்தனர். இருப்பினும் இந்த விபத்தில் அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments