வெறியூட்டும் வகையில் பேசி வருகிறார் சீமான்: தமிழிசை கண்டனம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

இளைஞர்களிடம் உணர்ச்சிகரமாக வெறியூட்டும் வகையில் பேசி வரும் நாம் தமிழ்ர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆவடியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அவர், விக்னேஷ் இறப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, அறிவுப்பூர்வமாக ஒரு பிரச்சனையை அணுக வேண்டுமே தவிர, உணர்வுப்பூர்வமாக வெறியூட்டும் வகையில் பேசி, இன்று விக்னேஷ் என்ற ஒரு இளைஞன் உயிரிழந்திருக்கிறான்.

அந்த இளைஞனுக்கு பாஜக சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம், அதே வேளையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசை வேறருப்போம் என கூறியுள்ளார், அவர் இவ்வாறு கூறியுள்ளது தேசவிரோத நடவடிக்கை என தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments