விக்னேஷின் உடலுக்கு இன்று அஞ்சலி: நாம் தமிழர் கட்சி கொடியை போர்த்த எதிர்ப்பு தெரிவித்த தாய்!

Report Print Deepthi Deepthi in இந்தியா

காவிரி பிரச்சனை தொடர்பாக சென்னை எழும்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழர் உரிமை மீட்புப் பேரணியில் மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் தீக்குளித்தார்.

கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து விக்னேஷின் விக்னேஷின் உடல், நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகமான வளசரவாக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு விக்னேஷின் உடலுக்கு, இயக்குநர்கள் விக்ரமன், வி. சேகர், களஞ்சியம், வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மன்னார்குடியில் சொந்த வீட்டில் வைக்கப்பட்ட பிரேதத்துக்கு கட்சியின் கொடி போர்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியினர் சிலர் முற்பட்டனர். அதற்கு உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து விக்னேஷின் தாயாரும் கொடியை போர்த்த மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மன்னார்குடியில் இன்று காலை 10 மணி வரை விக்னேஷின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாலையில் விக்னேஷின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் இறுதிசடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளார்கள்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments