சந்தில் சிந்து பாடிய கர்நாடக அமைப்பினர்: கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சில தினங்களுக்கு முன்னர் காவேரி பிரச்சனையில் கர்நாடகாவில் பெரிய கலவரம் வெடித்தது. இதை பயன்படுத்தி சில அமைப்புகள் அங்கு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

கர்நாடகாவில் பல இடங்களில் லாரியை கொளுத்துவது, கடைகளை உடைப்பது போன்ற சம்பவத்தில் சில அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

அடித்து நொறுக்கப்பட்ட சில கடைகளில் இருந்த CCTV வீடியோ காட்சிகளில் கலவரம் அன்று நடந்த கொள்ளை விடயங்கள் வெளியில் வந்துள்ளது.

இது பற்றி ஒருவர் கூறுகையில், கலவரம் நடந்த அன்று சில அமைப்பை சேர்ந்தவர்கள் சில பெரிய கடைகளுக்கு சென்று உங்கள் கடையை ஒன்றும் செய்யாமல் இருக்க பணம் தாருங்கள் என கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தந்தவர்கள் கடைகளை விட்டு, பணம் தராத கடைகளை குறி வைத்து தாக்கியுள்ளனர்.

மேலும் பெங்களூரில், ஒரு மளிகை கடையின் உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி வீட்டிற்கு திருடி செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

இது குறித்து பொலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கலவரத்தில் சம்மந்தபட்ட 250 நபர்களை இதுவரையில் கைது செய்திருக்கிறோம். கொள்ளை புகார் சம்மந்தமாக CCTV கேமராவை ஆய்வு செய்து வருகிறோம். புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை கடுமையானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அரசியல் பின்புலம் இருப்பவர்களே இதில் ஈடுபடுகிறார்கள், விநாயக சதுர்த்தி அன்று மிரட்டி கேட்டும் பணம் தராத கடைகளை மட்டும் குறி வைத்து தாக்குதல் நடந்துள்ளது என்றும் அரசு தலையிட்டால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்று பொலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments