கணவர் திருட்டு வழக்கில் சிக்கியதால் 3 மகள்களுடன் தூக்கில் தொங்கிய மனைவி

Report Print Aravinth in இந்தியா

தூத்துக்குடி மாவட்டத்தில் கணவர் திருட்டு வழக்கில் சிக்கியதால் தனது மூன்று மகள்களுடன் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (53). இவர் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் மின் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயா (50). மகள்கள் சக்திமாலா தேவி (25). பி.இ., படித்துள்ளார். கலைவாணி (20). ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார். காயத்ரி (17). ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், தமிழ்செல்வனுக்கு உடன் தற்காலிக பணியாளராக பணியாற்றும் ரேவதி என்பவருடன் கள்ளதொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. ரேவதிக்கும், சுதீஷ்ராஜா என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன் பின்னர் சுதீஷ்ராஜா மும்பையில் வேலை பார்த்து வருகிறார்.

இதை தொடர்ந்து, மும்பையில், ஒரு வீட்டில் 80 பவுன் நகை காணாமல் போன வழக்கில் சுதிஷ்ராஜாவிற்கு தொடர்பு உள்ளது என சுதிஷ்ராஜாவை மும்பை பொலிசார் ஆழ்வார்திருநகரிக்கு தேடி வந்துள்ளனர். வீட்டில் அவர் இல்லாத காரணத்தால் அவரது மனைவி ரேவதியிடம் விசாரித்துள்ளனர். ஆனால் பொலிசார் விசாரணைக்கு ரேவதி முரண்பாடாக பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், ரேவதி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு ஆசாரியிடம் விற்று பணமாக மாற்றிவிட்டதாக மும்பை போலீசுக்கு தகவல் கிடைள்ளது. உடனடியாக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு ஆசாரியிடம் விற்று பணமாக மாற்றிவிட்டதாக மும்பை போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொலிசார் உடனடியாக அந்த ஆசாரியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தமிழ்ச்செல்வனும், ரேவதியும் 80 பவுன் நகைகளை விற்று பணம் பெற்றது உறுதிபட தெரிய வந்துள்ளது. பின்பு, பொலிசார் தமிழ்செல்வனையும், ரேவதியையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்செல்வனின் மனைவிக்கு இந்த விடயம் தெரிய வரவே உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் மத்தியில் கவுரவமாக வாழ்ந்த தமிழ்ச்செல்வன் திருட்டு நகையை விற்ற வழக்கில் சிக்கி விட்டாரே என மனைவி ஜெயா, மகள்கள் சக்திமாலாதேவி, கலைவாணி, காயத்ரி ஆகியோர் மனம் உடைந்து அழுதனர். இனி மானத்தோடு உயிர் வாழ முடியாது என நினைத்தனர். இதையடுத்து தாய் ஜெயா, மகள்கள் சக்திமாலாதேவி, கலைவாணி, காயத்ரி ஆகிய 4 பேரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் 4 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயும், 3 மகள்களும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆழ்வார் திருநகரியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments