தமிழர்களின் உணர்வுகளை தூண்டும் தீக்குளித்த விக்னேஷின் இறுதி ஓடியோ..!

Report Print Basu in இந்தியா

தீக்குளித்து உயிரிழந்த நாம் தமிழர் கட்சி தொண்டர் பா.விக்னேஷ் இறுதியாக பேசிய ஓடியோ வெளியாகியுள்ளது.

சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் காவிரி உரிமை மீட்பு பேரணியில் மன்னார்குடியை சார்ந்த அக்கட்சியின் தொண்டர் பா.விக்னேஷ் தீக்குளித்தார்.

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் சிசிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனையடுத்து, அவரின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர், அவரின் சொந்த ஊரான மன்னார்குடிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. நாளை பா.விக்னேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பா.விக்னேஷ் இறுதியாக பேசிய ஓடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.facebook.com/powerofpositivity/videos//

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments