சூப்பர்ஸ்டாரின் வாரிசுக்கு கிடைத்த கெளரவம்

Report Print Abhimanyu in இந்தியா

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இந்திய திரைப்படங்களில் விலங்குகளின் நலம் பாதிக்கப்படாமல் காட்சி அமையவேண்டும் என்பது குறித்து இவர் கவனித்துக் கொள்வார் என்று தெரியவருகின்றது.

மேலும், அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் நிறுவனம் நடத்தும் சௌந்தர்யா திரைப்படங்களில் விலங்குகள் வரும் காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் காட்சிப்படுத்துவதில் அதிக நாட்டம் செலுத்தி குறித்து திரைப்பட படைப்பாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார் என கருதப்படுகிறது.

இது குறித்து இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் தங்களது அமைப்புடன் கைகோர்த்ததில் பெருமகிழ்ச்சி என கூறியுள்ளது.

மேலும் அண்மையில் ரஜினிகாந்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments