இரண்டு பெண்களை பொது இடத்தில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்திய நால்வர் கைது!

Report Print Ramya in இந்தியா

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் உள்ள பொது பூங்கா ஒன்றில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த இரண்டு இளம் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்திய 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்கள் இருவரும் Aman Vihar பகுதியில் உள்ள பூங்காவில் அமர்ந்திருந்த போதே இந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுள் இரண்டு சந்தேக நபர்கள் 18 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் என்றும் ஐந்தாவது சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண்களை காப்பாற்றச் சென்ற அவர்களின் நண்பர்களும் சம்பவத்தில் தாக்கப்பட்டுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு கும்பலால் மாணவி ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திலிருந்து இந்தியா இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திக் கொண்டே வருகின்றது.

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறாயினும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் இந்தியாவில் தொடர்ந்துக் கொண்டே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments