பெங்களூரில் பஸ்களை கொளுத்த தூண்டியது ஒரு பெண்! வெளியான திடுக்கிடும் தகவல்

Report Print Jubilee Jubilee in இந்தியா

பெங்களூரில் கேபிஎன் பஸ்களை தீயிட்டு கொளுத்திய கும்பலை ஒரு பெண் தான் தலைமையேற்று நடத்தியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் பொலிஸ் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 12ம் திகதி காவிரி விவகாரம் தொடர்பாக பெங்களூரில் நடைபெற்ற வன்முறையில் பெங்களூர் டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 42 பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக 7 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கலவர பின்னணியில் ஒரு பெண் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கலவரத்தில் தொடர்புடைய பெண்ணுக்கு டிராவல்ஸ் நிறுவனத்துடன் தொடர்புள்ளதை மறுக்க முடியாது. இந்த பெண்மணி முகத்தில் துணி கட்டிக்கொண்டு வன்முறை வெறியாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களுக்கு அந்த பெண் குறித்து எதுவும் தெரியவில்லை. நாங்கள் அனைத்து கோணத்திலும் விசாரித்து வருகிறோம். அவரை தீவிரமாக தேடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments