பாலியல் வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சசிகலாவின் அதிரடி முடிவு

Report Print Jubilee Jubilee in இந்தியா

பாலியல் வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய உள்ளதாக சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் வேலை பார்த்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதன் பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர், கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா, சசிகலாபுஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது தூத்துக்குடி பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து சசிகலா புஷ்பா எம்.பி. உள்பட 4 பேரும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அதேசமயம் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து அவர்கள் மீது புகார் கொடுத்துள்ள இளம்பெண் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு கடுமையானதாக உள்ளதாகவும், இதனால் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவர்கள் தலைமறைவாகவோ, தப்பித்துச் செல்லவோ வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து மோசடி நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டியது உள்ளது என்று கூறி சசிகலா புஷ்பா எம்.பி. உள்பட 4 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வேன். மீதமுள்ள என எம்.பி பதவிக்காலம் 4 ஆண்டுகளை முழுமையாக வகிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments