காதலுக்கு உதவி கேட்ட பெண்: பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட கொடூர சம்பவம்

Report Print Santhan in இந்தியா

திருநெல்வேலி அருகே உள்ள சுரண்டை பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள தனியார் ஆலையில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். இக்காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்க, அப்பெண் அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.

அவர் உங்கள் இருவருக்கும், தான் திருமணம் செய்து வைப்பதாக கூறி, அப்பெண்ணை கடந்த 11 ஆம் திகதி வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த பெண்ணிடம் காதல் விவகாரம் குறித்து பேசிய அவர், திடீரென அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதை வெளியில் சொல்லக்கூடாது என மாரியப்பன், அவரது மனைவி மிரட்டி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

பெண்ணின் நடத்தையில் சந்தேகமடைந்த பெற்றோர், அப்பெண்ணிடம் வற்புறுத்தி கேட்டுள்ளனர். நடந்தவற்றை அனைத்தையும் கூற, பெற்றோர் அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

பொலிசார் உடனடியாக மாரியப்பன், உடந்தையாக இருந்த அவரது மனைவி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments