தாய் எடுத்த முடிவு: குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் இரண்டரை வயது குழந்தையை வீட்டில் பூட்டி வைத்து விட்டு வேலைக்குச் சென்ற தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தனி பகுதியைச் சேர்ந்தவர் அருணா. இவருக்கு கீர்த்தனா என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது.

கீர்த்தனா அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதால், இரண்டரை வயது குழந்தையை வீட்டில் தனியாக வைத்து பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த குழந்தை செய்வதறியாமல் தொடர்ந்து அழுதுள்ளாள். குழந்தையின் அழுகுரலை கேட்ட அக்கம் பக்கத்தினர், வீட்டை திறந்து பார்க்கையில் குழந்தை அழுத நிலையில், உடல் சோர்வுற்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, குழந்தையை பொலிசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அருணா தான் தனியாக வசிப்பதால் குழந்தைக்கு தேவையான அனைத்தும் அருகில் வைத்து விட்டு வீட்டின் உள்ளே அடைத்து வைத்து விட்டு வேலைக்குச் சென்று விடுவேன்.

அவள் அழமாட்டாள். தற்போது அவள் தொடர்ந்து அழுததால் அருகில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது.

ஆகையால் இது போன்ற தவறு இனி செய்ய மாட்டேன் என பொலிசாருக்கு வாக்குமூலம் அளித்த காரணத்தினால், பொலிசார் குழந்தையை அருணாவிடம் அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments