ஸ்டாலின் கைது!

Report Print Deepthi Deepthi in இந்தியா

காவிரி நதிநீர் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை எழும்பூரில் திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

எழும்பூர் ரயில் மறியலில் சென்னை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 5000 பேர் பங்கேற்றனர். அப்போது கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷமிட்டனர். ரயில் மறியலில் ஈடுபட ராதாகிருஷ்ணன் அரங்கத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற ஸ்டாலின் உட்பட அனைவரையும் பொலிசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் பந்த்: தலைவர்களின் நிலவரங்கள் என்ன? யார் யார் கைது?

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments