தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்

Report Print Santhan in இந்தியா

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தில் அனைத்து அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தமிழகம் முழுவதும் முழு அழைப்பு போராட்டத்தில் ஈடுபட அனைத்து அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல லட்சம் கடைகள் அடைக்கப்பட்டதுடன், ஆம்னி, லொறிகள், வேன்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அசாம்பவித சம்பவங்கல் நடைபெறாமல் இருப்பதற்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொலிசார், தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இப்போராட்டம், காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும் நடைபெறுவதாக அறிவித்துள்ளது.

ஆனால் ரெயில் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments