நான் தமிழன் என்பதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவில்லை: கர்நாடகாவில் தாக்கப்பட்ட லொறி ஓட்டுநர் பரபரப்பு பேட்டி!

Report Print Santhan in இந்தியா

கர்நாடாகாவில் கன்னடம் பேசச் சொல்லி தாக்கப்பட்ட தமிழக லொறி ஓட்டுனர், அங்கு நடந்தது என்ன என்பதை தற்போது விளக்கியுள்ளார்.

காவிரி நதி நீர் பிரச்சனை காரணமாக கன்னட இளைஞர்கள் சிலர் தமிழர்களை தாக்குவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினர்.

கர்நாடகாவில் கன்னட இளைஞர்கள் சிலரால் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த லொறி ஓட்டுநர் சோனமுத்து தாக்கப்பட்டார்.

தற்போது தமிழகம் வந்துள்ள சோனைமுத்து கூறுகையில், கர்நாடகாவில் லொறி ஓட்டிச் சென்ற போது, 50க்கும் மேற்பட்ட கன்னடர்கள் லொறியை சுற்றி வளைத்தனர். அதன் பின் லொறியை சேதப்படுத்தியதுடன், என்னையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.

அதைத் தொடர்ந்து கன்னடம் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தி கைப்பேசியில் வீடியோ எடுத்தனர். கன்னடம் தெரியாது என கூறியதால் என்னைத் தாக்கினர்.

பெரிதும் பாதிக்கப்பட்டதை கண்ட அங்கிருந்த பொதுமக்கள், உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அம்மருத்துவமனையில் நான் தமிழன் என்பதால் தனக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்.

அதன் பின்னர் தமிழர்கள் சிலரின் உதவியுடன் ஓசூர் வந்து , ஓசூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments